×

திருமயம் அருகே பேரையூர் நாகநாதர் கோயில் தேரோட்டம்

திருமயம், ஏப்.14: திருமயம் அருகே பேரையூர் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேர் இழுத்து தரிசனம் செய்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான பேரையூர் பிரகதம்பாள் உடனுறை நாகநாதர் கோயில். அப்பகுதியில் மிகவும் பிரசிதிபெற்ற கோயிலாகும். இக்கோயிலின் பங்குனி திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றுத்துடன் முதல் திருவிழா தொடங்கியது.

அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நாகநாதருக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்றது. இந்நிலையில் 9ம் திருவிழாவை முன்னிட்டு விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நேற்று நடைபெற்றது. தேரானது காலை 10 மணியளவில் தேரடியில் இருந்து புறப்பட்டு நாகநாதர் கோயில் ஊரணியை சுற்றி வந்து மதியம் 3மணியளவில் தேரடியை வந்தடைந்து. அப்போது சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் தேரைவடம் பிடித்து இழுத்து தாpசனம் செய்தனர். இதனை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் வந்திருந்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகமும், பேரையூர் கிராமத்தார்களும் செய்திருந்தனர்.

Tags : Periyoor Naganathar ,Thirumayam ,
× RELATED டோல்பூத் கட்டணத்தை தவிர்க்க...